யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இலங்கையில் அனைவருக்கும் சம உரிமை : ராஜபக்சே
கொழும்பு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 16:19 IST )
இலங்கையில் வாழும் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொள்ளும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாக வென்று விட்டதாக சிறிலங்க அரசு நேற்று அறிவித்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்சே இன்று உரையாற்றினார்.

அதில், நம் நாட்டில் உள்ள அனைவரும் ஒரு தாய் மக்கள்.இங்கு மத, குல பேதம் இருக்க முடியாது.கடந்த 40 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மக்கள் ஏராளம்.சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் பலர் அவர்களால் கொல்லப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம்.விடுதலைப் புலிகளின் கோரப் பிடியில் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதே எமது நோக்கம்.சிறிலங்க அரசாங்கம் நடத்திய போர் விடுதலைப் புலிகள் மீதானது ; தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல.

புலிகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக ஏராளமான எமது படை வீரர்கள் உயிர் நீத்தார்கள்.சிறிலங்கப் படையினரால் ஒரு பொதுமக்கள் கூட உயிரிழக்கவில்லை.

தமிழ் மக்களை பாதுகாப்பதே என் பொறுப்பு.சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமையோடு, பாதுகாப்போடு வாழ வேண்டும்.அதுவே என் நோக்கம்.சிறிலங்காவைப் பொறுத்த வரை சிறுபான்மையினர் என்று எந்தப் பிரிவும் இல்லை.

நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைக்க எந்த அமைப்பையும் அனுமதிக்க மாட்டோம்.சிறிலங்காவில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

சிறிலங்காவில் இரு தரப்பினர் மட்டுமே உள்ளனர்.அதில் ஒன்று சிறிலங்காவை நேசிப்பவர்கள்.மற்றொரு தரப்பினர் சிறிலங்காவை நேசிக்காதவர்கள்.இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழ வேண்டும்.அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்த, வலிமையான சிறிலங்காவை கட்டியெழுப்ப வேண்டும்.

இது இலங்கையின் வரலாற்றில் மாபெரும் வெற்றி தினம்.விடுதலைப் புலிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டனர். ஒன்றுபட்ட சிறிலங்காவில் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும் என அதிபர் ராஜபக்சே பேசினார்.

அதே சமயம் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக சிறிலங்க அரசாங்க அறிவித்தது பற்றி, தனது உரையில் அதிபர் ராஜபக்ச எதையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஸ்வாட் மக்கள் அவதி: பாக். ராணுவம், தாலிபான்களுக்கு கண்டனம்
பாதுகாப்பு வளையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன ?
பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
பிரபாகரன் நலமாக இருக்கிறார் : புலிகள் அறிவிப்பு
விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் : சரத் பொன்சேகா
பிரபாகரனை கொன்றதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...