யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஸ்வாட் மக்கள் அவதி: பாக். ராணுவம், தாலிபான்களுக்கு கண்டனம்
நியூயார்க் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 16:13 IST )
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ராணுவம், தாலிபான்களுக்கு இடையே நடந்து வரும் ண்டையால் அப்பகுதி க்கள் கடும் அவதிப்படுவதாக தெரிவித்துள்ள ர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு, இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ், நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஸ்வாட் பகுதியில் கண்ணிவெடி தாக்குதல், பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கையில் தாலிபான்களும், வான் வழித் தாக்குதல், ஏவுகணை வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவமும் ஈடுபட்டுள்ளன.இது அப்பகுதி மக்களை தேவையில்லாத ஆபத்தில் சிக்க வைத்துள்ளது.

சண்டை நடந்து வரும் பகுதியில் போதிய உணவு, மருத்துவப் பொருட்கள் கிடைப்பதில்லை.எனவே, போர்ப் பகுதியில் உள்ள மக்களை விரைவில் வெளியேற்ற இரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாலிபான்களுக்கு எதிரான தாக்குதலில் பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என கடந்த மே 13 ம் தேதி பாகிஸ்தான் தளபதி கயானி ராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், கடந்த மே 8 ம் தேதி மின்கோராவின் அருகே உள்ள ஷாத்ரா, வாத்கே பகுதிகளில் தாலிபான்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 35 பேர் பலியாகினர். ஆனால் இவர்களில் ஒருவர்கூட தாலிபான் தீவிரவாதி இல்லை.

இதேபோல் கடந்த மே 11 ம் தேதி மட்டா பகுதியில் நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதலில் 3 பெண்கள், 8 குழந்தைகள் உயிரிழந்ததாக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாதுகாப்பு வளையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன ?
பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
பிரபாகரன் நலமாக இருக்கிறார் : புலிகள் அறிவிப்பு
விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் : சரத் பொன்சேகா
பிரபாகரனை கொன்றதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கத் தயார்: செ.பத்மநாதன்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...