|
| பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு |
| கொழும்பு (ஏஜென்சி), 19 மே 2009 ( 15:26 IST ) | |
விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி, கடற்புலிப் பிரிவுத் தலைவர் சூசை, உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் போரில் மரணடைந்துவிட்டதாக இலங்கை ராணுவம் நேற்று அறிவித்தது.
இதில் பிரபாகரன் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள், கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் வாகனம் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
அதே சமயம் மரபணு சோதனைக்குப் பின்னரே கொல்லப்பட்டது பிரபாகரன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இயலும் என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பிரபாகரன் நலமுடன் உள்ளதாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இயக்கத்தின் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறிய அதிபர் ராஜ பக்சே, அந்த உரையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படுவதைப்பாற்றி எதுவும் தெரிவிக்காமல், அதனை தவிர்த்துவிட்டார்.
இந்நிலையில், பிரபாகரனது உடல் நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை தொலைக்காட்சியில் அறிவித்த அந்நாட்டின் ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா, தமது இந்த அறிவிப்புக்கு தாமே பொறுப்பேற்றுகொள்வதாகவும் கூறினார்.
அவரது இந்த அறிவிப்பின்போது பிரபாகரனது உடலை காட்டும் வீடியோப் பதிவுக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.நெற்றியில் துப்பாக்கிக்குண்டு துளைக்கப்பட்டது தெரிகிறது.இருப்பினும் சயனைடு குப்பி கடித்து அவர் உயிர் துறந்திருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவரது உடலை ராணுவத்தினர் எடுத்து வந்து அவரது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.அவர்கள் தரப்பில் இதனை ஒப்புக்கொண்டால் மட்டுமே பிரபாகரன் மரணமடைந்தார் என்பது நூறு சதவீதம் உண்மையாக கருதப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|