யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பிரபாகரன் நலமாக இருக்கிறார் : புலிகள் அறிவிப்பு
லண்டன், செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 11:49 IST )
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் சிறிலங்கப் படையினரால் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்துள்ளதாவது:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்க அரசாங்கம் பிரகடனப்படுத்தி இருக்கிறது.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் அறிவித்திருக்கிறது.இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்க வெற்றி பெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கிறது.எமது தேசியத் தலைவர் உயிருடனும், நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.

ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை.இது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா ராணுவம் தமக்கு ஒரு ராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம்.ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு ராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை முந்தைய அறிக்கைகள் பலவற்றிலும் நாம் தெளிவாகத் தெரிவித்திருந்தோம்.

எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம்.தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்க அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனை கருத்தில் கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்க அரசு குறியாக இருந்தது.

எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த விஷயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்க அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம்.

ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சனையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகிறது.

தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள்.ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்து கொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?
(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் : சரத் பொன்சேகா
பிரபாகரனை கொன்றதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கத் தயார்: செ.பத்மநாதன்
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்
இன அழிப்பின் இறுதிக்கட்டம் : இலங்கை ராணுவம் வெறி தாக்குதல்
150 விடுதலைப்புலிகள் பலி: பிரபாகரன் கதி என்ன?
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...