|
| பிரபாகரனை கொன்றதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு |
| கொழும்பு (ஏஜென்சி), 18 மே 2009 ( 14:11 IST ) | |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இன்று வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சுட்டுக் கொன்றதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடுவிய சிறிலங்கப் படை, 100 சதுர மீட்டர் பரப்பளவு நிலம் மட்டுமே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதனை மீட்க நடவடிக்கை தொடருவதாக தெரிவித்திருந்தது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணிம,விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன், மூத்த தளபதி சுரேஸ் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க ராணுவத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாகாலை பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டோர் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றபோது, குண்டு வீசி அந்த வேனை தகர்த்ததாகவும், இதில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவரது உடல் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
மேலும் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாக பெயர் வெளியிட விரும்பாத இலங்கை ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை இந்திய ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களும் பரபரப்பாக செய்தியாக வெளியிட்டு வருகின்ற நிலையில், இந்த செய்தி குறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல் ஏதும் இல்லை.புலிகள் ஆதரவு இணையதளமும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இன்று மாலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் இலங்கை அதிபர் ராஜ பக்சே தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது பிரபாகரன் கொல்லப்பட்டதை ராஜ பக்சே உறுதி செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜபக்செவும் இது குறித்து நாளை இலங்கை நாடாளுமன்றத்த்தைக் கூட்டி இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடலாம் என தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|