யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கத் தயார்: செ.பத்மநாதன்
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009   ( 12:06 IST )
இலங்கையில் போரை நிறுத்துவது தொடர்பாகவே விடுதலைப்புலிகள் தொடர்ந்து பேசி வருவதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது சரணடைவதோ ஆயுதங்களைக் கையளிப்பதோ அல்ல.அப்பகுதியில் படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையை விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவதாக லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சேனல்-4’ தொலைக்காட்சிக்கு நேற்று மாலை அளித்த பிரத்யேகப் பேட்டியில் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பிந்தைய நிலைப்பாடு என்ன?

பதில்: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராக இருக்கிறது.
எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

இரண்டாயிரத்துக்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர்.நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஒவ்வொரு மணி நேரமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள்.நேற்றில் இருந்து 3,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.சுமார் 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

அவர்கள் பொதுமக்களா?

ஆம்.அவர்கள் அனைவரும் பொதுமக்களே.

சிறிலங்கா அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கின்றீர்கள்?

போரை நிறுத்துவது தொடர்பாகவும், உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாம் நேற்று முதல் பேசிக் கொண்டிருக்கின்றோம்.நாம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

இந்த போர்கள் எல்லாவற்றுக்கும் பின்னர் போர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதா?

ஆம்.நாம் இந்த போரை நிறுத்திக்கொள்வதற்கே விரும்புகின்றோம்.

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்... விடுதலைப் புலிகள் கொரில்லா போர் போன்ற முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

நான் நினைக்கின்றேன், கடந்த 38 ஆண்டுகளாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.தினமும் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன.இன்னும் 30 ஆண்டுகளுக்கு இது தொடர்ந்தால்... நான் அதனை நம்பவில்லை.தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

புலிகள் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எவ்வாறான உத்தரவுகள் வந்திருக்கின்றன?

பிரபாகரன்தான் உண்மையில் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.நான்கு மணி நேரம் நான் அவருடன் பேசினேன்.அவர்தான் இந்தச் செய்தியை சிறிலங்க அரசாங்கத்துக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் தந்திருக்கிறார்.அதற்கான பதிலுக்காக நாம் காத்திருக்கிறோம்.இதுவரையில் இதற்கான பதிலை யாரும் தரவும் இல்லை , யாரும் போரை நிறுத்தவும் இல்லை.

பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றார்?

ஆம்.
(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்
இன அழிப்பின் இறுதிக்கட்டம் : இலங்கை ராணுவம் வெறி தாக்குதல்
150 விடுதலைப்புலிகள் பலி: பிரபாகரன் கதி என்ன?
சிறிலங்க படையினர் குண்டு மழை: மரண பூமியாக மாறிய முள்ளிவாய்க்கால்
இந்தியாவுக்கு விரைவில் புதிய அயலுறவுக் கொள்கை : ஒபாமா திட்டம்
பாதுகாப்பு வளையத்தின் மீது மும்முனைத் தாக்குதல்
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...