|
| மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம் |
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ பராமரிப்பின்றி அங்கு 25 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல்சூசை அனைத்துலக ஊடகங்களுக்காக தொலைபேசியில் விடுத்துள்ள தகவலில், படுகாயமடைந்த 25,000 பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டு வருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம்.ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடமும் கேட்டுக் கொண்டோம்.
காயமடைந்தவர்களை அனுப்பி வைக்கிறோம் நீங்கள் அவர்களை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்டோம்.இருந்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
தற்போது அந்த 25,000 மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணம் அடைந்திருக்கின்றனர் என மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்துள்ளார்.
சுமார் 2 கி.மீ. சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்க படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.
போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிப்பது இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக் கொன்று விடுவதற்குத்தான் அவர்கள் முயல்கின்றனர் எனவும் சூசை குற்றம் சாற்றியுள்ளார்.
இங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கிறது.தற்போது படுகாயமடைந்திருக்கும் 25,000 மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கப் படையினருடன் புலிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை.கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை குறிப்பிட்டார்.
அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உதவி கேட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்போது இன்னும் 20,000 மக்கள் வரை காயம்பட்டிருக்கின்றனர்.
அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர்.படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.2 கி.மீ. சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர் என்றும் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்று ஒழிப்பதுதான் சிறிலங்க அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு பாரிய மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துவதாக புதினம் இணையதளம் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|