|
| இன அழிப்பின் இறுதிக்கட்டம் : இலங்கை ராணுவம் வெறி தாக்குதல் |
| கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 11:19 IST ) | |
பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிராமத்தின் மீது இலங்கைப் படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்திவரும் கொடூரத் தாக்குதலில் இதுவரை 4,000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 25,000 பேர் படுகாயமுற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க ராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என புதினம் இணையத்தளமும், சிறிலங்க ராணுவ இணையத் தளமும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மிகக் குறுகிய நிலப் பகுதியில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற விடாமல் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறிலங்க ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் ஆங்காங்கு சிதறிக் கிடப்பதாகவும், காயமுற்ற 25,000 மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் மருத்துவ உதவு ஏதுமின்றி செத்துக் கொண்டிருப்பதாகவும் தொலைபேசி வாயிலாக கூறிய விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசை, அப்பாவி மக்களைக் காத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
படுகாயமுற்று உதவிட ஆளில்லாமல் வீழ்ந்து கிடக்கும் மக்களின் மரண ஓலங்களே எங்கெங்கும் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ள புதினம் இணையத் தளத்தின் செய்தியாளர், இதுவே அங்கிருந்து தான் அளிக்கும் கடைசி செய்தியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடுவிய சிறிலங்கப் படை, 100 சதுர மீட்டர் பரப்பளவு நிலம் மட்டுமே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதனை மீட்க நடவடிக்கை தொடருவதாக தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன், மூத்த தளபதி சுரேஸ் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க ராணுவத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|