யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
150 விடுதலைப்புலிகள் பலி: பிரபாகரன் கதி என்ன?
புதுடெல்லி/ கொழும்பு (ஏஜென்சி), 17 மே 2009   ( 17:19 IST )
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 150 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் இத்தாக்குதலில் உயிரிழந்திருக்கக் கூடும் என சிறிலங்க ராணுவ வட்டாரங்களைக் குறிப்பிட்டு தொலைக்காட்சிகளிலும், இணைய தளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் சிறிலங்க அரசு வெளியிடவில்லை என்பதால் இச்செய்தி வதந்தியாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக ஐ.பி.என் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், படையினரின் தாக்குதலில் பலியான 150 புலிகளை அடையாளம் காண்பதற்காக அவற்றை கொழும்பில் உள்ள ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச பேசுகையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சிறிலங்க அரசு முற்றிலுமாக ஒழித்து விட்டதாக கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிறிலங்க படையினர் குண்டு மழை: மரண பூமியாக மாறிய முள்ளிவாய்க்கால்
இந்தியாவுக்கு விரைவில் புதிய அயலுறவுக் கொள்கை : ஒபாமா திட்டம்
பாதுகாப்பு வளையத்தின் மீது மும்முனைத் தாக்குதல்
மும்பைத் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி வழங்க அமெரிக்கா எதிர்ப்பு
விஜய் நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...