யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சிறிலங்க படையினர் குண்டு மழை: மரண பூமியாக மாறிய முள்ளிவாய்க்கால்
கொழும்பு (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009   ( 14:54 IST )
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றி வளைத்துள்ள சிறிலங்கப் படையினர், பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.

படையினரின் இடைவிடாத குண்டு மழையினாலும், தொடர்ச்சியாக உணவோ குடி தண்ணீரோ இல்லாமல் பதுங்கு குழிகளுக்குள் தொடர்ச்சியாக 4வது நாளாக இருப்பதால் பெருமளவு தமிழர்கள் உயிரிழக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், உடல் உறுப்புக்களை இழந்து மேலும் பலர் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டு இருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் நான்கு புறங்களிலும் இருந்தும் மேற்கொள்ளும் கனரக தாக்குதல்களை சில நிமிட நேரம் கூட நிறுத்தவில்லை எனவும், கடுமையான காயங்களுக்குள்ளான ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சை இல்லாமல் மரணத்தைத் தழுவும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களும், படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடுபவர்களையும் அப்பகுதி எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது. தாக்குதல்கள் தொடர்வதால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உடனடி உதவிகளைக் கூட செய்ய முடியாத நிலையில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் இருக்கின்றனர்.

முள்ளிவாய்காலின் அனைத்துப் பகுதிகளிலும் மிகவும் நெருக்கமாக நேருக்கு நேரான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியாவுக்கு விரைவில் புதிய அயலுறவுக் கொள்கை : ஒபாமா திட்டம்
பாதுகாப்பு வளையத்தின் மீது மும்முனைத் தாக்குதல்
மும்பைத் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி வழங்க அமெரிக்கா எதிர்ப்பு
விஜய் நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்
மலேசியா : இந்தியப் பெண்ணுக்கு தூக்குத் தண்டனை
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...