|
| பாகிஸ்தான் ராணுவம்-தாலிபான் தாக்குதல்: 20 பேர் பலி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 14 மே 2009 ( 15:25 IST ) | |
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவத்திற்கும், தாலிபான்களுக்கும் இடையிலான சண்டையில் 11 தீவிரவாதிகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு ஸ்வாட் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் நசீப் ரெஹ்மான் உட்பட 11 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், ஏராளமான தீவிரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ராணுவத் தரப்பில் 4 வீரர்கள் பலியானதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தலை இல்லாத 5 உடல்கள் மின்கோர நகரப் பகுதியின் வெவ்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
ஸ்வாட், பர்னர், திர் ஆகிய மாவட்டங்களில் தாலிபான்களுக்கு எதிராக ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 750 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று கூறியது. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கையை விட பாக். ராணுவ கூறும் பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|