யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு!
வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009   ( 15:22 IST )
இலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனை உருவாவதைத் தவிர்க்குமாறு கோரியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் பராக் ஒபாமா, இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சனை உருவாகியிருக்கிறது.

இந்தப் பிரச்சனை ஒரு பேரழிவாக மாற்றமடைவதற்கு முன்பாக சிறிலங்க அரசு போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, வெள்ளை மாளிமை முன்பாக கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒபாமாவின் பேச்சுக்கு இன்று வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு தலைமை தாங்கி போராட்டம் நடத்தி வரும் எலியாஸ் ஜெயராஜா இதுகுறித்துப் பேசுகையில், தமிழர்கள் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும், போர் பகுதியில் சிக்கியுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்ற அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை சிறிலங்க அரசாங்கம் மறுக்க முடியாது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதிபர் ஒபாமாவின் பேச்சு, இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை பார்த்துக் கொண்டு உலக நாடுகள் அமைதியாக இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் ஜெயராஜா கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரஷ்யாவின் அதிபர் பதவிக்கு புடின் மீண்டும் முயற்சி?
பிரச்னையை தீர்க்காவிட்டால் பேரழிவை தவிர்க்க முடியாது: ஒபாமா
இலங்கையில் போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து வலியுறுத்தல்
ஆப்கான் : யு.எஸ். ராணுவ தளம் அருகே தாக்குதல்
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் : இலங்கையின் இரட்டைநிலை அம்பலம்
இலங்கை ராணுவ தாக்குதல் : யுனிசெஃப் எச்சரிக்கை
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...