யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ரஷ்யாவின் அதிபர் பதவிக்கு புடின் மீண்டும் முயற்சி?
லண்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009   ( 15:18 IST )
ரஷ்யாவின் அதிகாரம் மிக்க நாடாளுமன்ற நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் அதிகாரத்தை, நாடாளுமன்ற நீதிபதிகளிடம் இருந்து பறிப்பதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு அதிபர் அலுவலகம் ஈடுபட்டுள்ளது. இது தற்போதைய பிரதமர் புடினை மீண்டும் அதிபர் பதவியில் அமர வைப்பதற்கான ரகசிய நடவடிக்கையாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

தற்போது அந்நாட்டு பிரதமராக உள்ள விளாடிமிர் புடின், மீண்டும் அதிபர் பதவிக்கு 2012ஆம் ஆண்டு போட்டியிடலாம் எனக் கருதப்படுகிறது. இது சட்டப்படி செல்லும். ஆனால் அந்த காலக்கட்டத்திற்கு முன்பாக அவரை மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் அதிபர் அலுவலகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்தின் ‘தி டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், அரசியல் சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் உள்ள 19 நீதிபதிகள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தலைமை நீதிபதியைத் தேர்வு செய்யும் முறை அமலில் உள்ளது.

இந்த அதிகாரத்தை நாடாளுமன்ற நீதிபதிகளிடம் இருந்து பறிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் ஈடுபட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் உரிமை அதிபருக்கு கிடைப்பதன் காரணமாக, புடினுக்கு நெருக்கமானவர்கள் நாடாளுமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் மூலம் வரும் 2012ஆம் ஆண்டுக்கு முன்பாகவே புடின் அதிபர் பதவிக்கு போட்டியிட்டாலும், அதனை நாடாளுமன்ற தலைமை நீதிபதி எதிர்க்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரச்னையை தீர்க்காவிட்டால் பேரழிவை தவிர்க்க முடியாது: ஒபாமா
இலங்கையில் போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து வலியுறுத்தல்
ஆப்கான் : யு.எஸ். ராணுவ தளம் அருகே தாக்குதல்
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் : இலங்கையின் இரட்டைநிலை அம்பலம்
இலங்கை ராணுவ தாக்குதல் : யுனிசெஃப் எச்சரிக்கை
ஹப்பிள் : 7 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது அட்லாண்டிஸ்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...