யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இலங்கையில் போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து வலியுறுத்தல்
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009   ( 15:19 IST )
இலங்கையில் போர்ப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் நலன் கருதி லங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்திவிட்டு, மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என மெரிக்காவும், இங்கிலாந்து அரசும் வலியுறுத்தியுள்ளன.

இங்கிலாந்து அயலுறவு செயலர் டேவிட் மில்லிபாண்ட், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் வாஷிங்டனில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் இரு தரப்பினரும் போரை நிறுத்திவிட்டு, பாதுகாப்பு வளையப் பகுதியில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையின மக்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை அமைவதற்கு ஏற்ற - இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான - அரசியல் தீர்வை சிறிலங்க அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அனுமதிக்க வேண்டும். அதேபோல் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று கடந்த ஏப்ரல் 27 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர்ப் பகுதியில் காயமடைந்துள்ளவர்களுக்கு உதவுவதற்காகவும், அங்குள்ளவர்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றவும், ஐ.நா.வின் மனிதாபிமானக் குழுவை சிறிலங்க அரசு போர்ப் பகுதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆப்கான் : யு.எஸ். ராணுவ தளம் அருகே தாக்குதல்
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் : இலங்கையின் இரட்டைநிலை அம்பலம்
இலங்கை ராணுவ தாக்குதல் : யுனிசெஃப் எச்சரிக்கை
ஹப்பிள் : 7 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது அட்லாண்டிஸ்
யு.எஸ். ஏவுகணைத் தாக்குதல்: பாக்.கில் 8 பேர் பலி
பன்றிக் காய்ச்சல்: உலகம் முழுவதும் 4,694 பேர் பாதிப்பு
செய்திகள்
தேசியம் - காங்கிரஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக இடதுசாரிகள் கருதவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...