|
| முள்ளிவாய்க்கால் அருகே கடும் மோதல்: செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை |
| வன்னி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 8 மே 2009 ( 18:48 IST ) | |
முல்லைத் தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு வளையப் பகுதியில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை அருகே விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்றுவரும் கடும் மோதலால் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
காயமடைந்த பொதுமக்களையும் அவர்களுடைய உறவினர்களையும் மருத்துவத் தேவைகளுக்காக வெளியேற்றும் நடவடிக்கைகளை இந்த மோதல் பாதித்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் தெற்காசியப் பொறுப்பாளரான ஜக்கியு டி மயோ தெரிவித்துள்ளார்.
வன்னியில் இருந்து 495 நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் நேற்று கிரீன் ஓசன் என்று கப்பலின் மூலம் வெளியேற்றப்பட்டனர் என்று புதினம் செய்தி தெரிவிக்கிறது.
இவர்களையும் விட பல நோயாளிகளும், படுகாயமடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையிலேயே தற்போது தற்காலிக மருத்துவமை அமைந்திருக்கும் இடத்தில் போர் தீவிரம் அடைந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - வருகிற மே 31 ம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகள் அனைத்திலும் " புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது " என்பதை உணர்த்தும் எச்சரிக்கை படங்கள் இடம்பெறும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு... |
| |
|
|
|
|
|
|