யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
தாலிபன்கள் மிரட்டல் : பாகிஸ்தானில் உஷார் நிலை
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   ( 13:36 IST )
தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போவதாக, தாலிபான் பயங்கரவாதிகள் விடுத்த மிரட்டல் காரணமாக பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் மிகப்பெரிய அளவில் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலைப்படை தாக்குவோம் நடத்துவோம் என தாலிபான் பயங்கரவாதிகள் அமைப்பின் தளபதி பைதுல்லா மசூத் மிரட்டல் விடுத்ததாக பாகிஸ்தானில் தகவல் பரவியது.இதையடுத்து, பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டனர்.

அமெரிக்க தூதரகம், ஐ.நா, மற்றும் உலக வங்கி அலுவலகங்கள் போன்றவற்றின் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறினார்.

பயங்கரவாதிகளின் இந்த மிரட்டல் காரணமாக தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம், நாடாளுமன்றம், அரசு அலுவலகங்கள் மற்றும் தூதரக அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழர் பாதுகாப்பு வளையத்தில் நுழைந்தது இலங்கை ராணுவம் !
இலங்கைப் படையினர் தாக்குதல் : 322 தமிழர்கள் படுகொலை
இந்தியா அழைப்பை நிராகரித்தது த.தே. கூட்டமைப்பு
வன்னி நிலை : ராஜ பக்சேவுடன் பான் கி மூன் பேச்சு
இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌‌க்கு அர‌‌சிய‌ல் ‌தீ‌ர்வு : யு.எஸ். வலியுறுத்தல்
வன்னி அவலம் : ஐ.நா.வில் மீண்டும் விவாதம்?
செய்திகள்
தமிழகம் - " எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே " என்று சோனியா காந்தியை பார்த்து தாம்கேட்டுக் கொள்வதாக கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போரை நிறுத்த சோனியாவின் குரல் இந்திரா காந்தியின் குரலாக இருக்க வேண்டுமென்றும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்...
காஞ்சிவரம் - விமர்சனம்
1977 - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...