|
| இலங்கை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ? |
| வன்னி (ஏஜென்சி), 27 பிப்ரவரி 2009 ( 17:26 IST ) | |
முல்லைத் தீவுப் பகுதியில் குண்டு வீச வந்த இலங்கை விமானப் படையின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளே இதனை வீழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இன்று காலை 11.25 மணியளவில் முல்லைத் தீவை நோக்கி வந்த கிஃபீர் என்ற அந்த குண்டு வீச்சு விமானம் நடுவானில் வெடித்துச் சிதறி, கரும்புகையுடன் கீழே விழுந்தததை முல்லைத் தீவுப் பகுதி மக்கள் கண்டுள்ளதாக தமிழ்நெட்.காம் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விவரங்களை விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் செய்தி வெளிடவில்லை என்ற போதிலும், புலிகளே அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என தெரிகிறது.
எனினும் இது குறித்து புலிகள் விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளிடம் வான் இலக்குகளை வீழ்த்தக்கூடிய ஏவுகணைகளோ அல்லது விமான எதிர்ப்பு பீரங்கிகளோ இல்லை என்றும், அப்படி இருந்தாலும் அது கிஃபீர் போன்ற அதிவிரைவு சூப்பர்சானிக் விமானங்களை வீழ்த்தும் திறன் கொண்டவைகள் அல்லவென்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 14 வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டன... |
| |
|
|
|
|
 | | | வெண்ணிலா கபடி குழு- விமர்சனம் | | தமிழ் சினிமாவுக்கே உரித்தான வழக்கமான அடிதடி சண்டை, குத்தாட்டத்துடன் கூடிய பாடல் என இல்லாமல் மாறுபட்டு வெளி வந்துள்ளது, 'வெண்ணிலா கபடி குழு'... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள். அவற்றை ஒதுக்கித் தள்ளாமல் சாப்பிட வேண்டும்... |
| |
|
|
|
|
|
|