|
| யு.எஸ்- ரஷ்யா செயற்கைக்கோள் மோதல் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 13 பிப்ரவரி 2009 ( 11:27 IST ) | |
விண்வெளியில் ரஷ்யாவின் செயலிழந்த செயற்கைக்கோள் மீது அமெரிக்காவின் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள் மோதி விபத்துக்குள்ளானது.
கடந்த 1993ம் ஆண்டு 800 கிலோ எடையுள்ள தகவல் தொடர்புக்காக ஓர் செயற்கைக்கோளை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பியது.இது தற்போது செயலிழந்து, பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றி வருகிறது.
இந்த செயற்கைக்கோள் மீது, அமெரிக்கா ஏவிய தகவல் தொடர்புக்கான மற்றொரு செயற்கைக்கோள் மோதியது. ரஷ்யாவின் சைபீரியா பகுதியின் மேல் சுமார் 780 கி.மீ. உயரத்தில் கடந்த செவ்வாய்கிழமை, இந்த விபத்து நிகழ்ந்தது.
இதன் காரணமாக இரு செயற்கைக்கோள்களும் நொறுங்கிவிட்டன. அவை, ஏற்கனவே உள்ள இயந்திரக் குப்பைகளுடன் சேர்ந்து கொண்டன.
இந்த குப்பைகளால் விண்வெளியில் செயல்பட்டு வரும் 'சர்வதேச விண்வெளி ஆய்வு மைய'த்துக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் உள்ள தென் மண்டல ராணுவ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்... |
| |
|
|
|
|
 | | | காதல்னா சும்மா இல்ல- விமர்சனம் | | 'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதிரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சில பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சீரான கால இடைவெளியில் இருப்பதில்லை.
மிகக் குறுகிய காலத்தில் வருவது, தாமதமாக வருவது போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு... |
| |
|
|
|
|
|
|