யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
புலிகள் தாக்குதலில் 1000 சிங்கள படையினர் பலி
வன்னி / கொழும்பு (ஏஜென்சி), 7 பிப்ரவரி 2009   ( 18:51 IST )
பிப்ரவரி 1 ம் தேதியிலிருந்து 6 ம் தேதி வரை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள திலடித் தாக்குதலில் 1000 க்கும் அதிகமான சிங்களப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முல்லைத்தீவில் கடும் தாக்குதலை நடத்தி வரும் சிங்கள படையினரை எதிர்கொண்டு புலிகள் நடத்தும் பதில் தாக்குதலில் பலியாகும் படையினரின் எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல் எதையும் அந்நாட்டு ராணுவம் தெரிவிப்பதில்லை.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1 ம் தேதியிலிருந்து 6 ம் தேதி ( நேற்று )வரையிலான காலக்கட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட சிங்களப்படையினர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான படையினர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள் ஆதரவுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் அதிபயங்கர அதிரடி தாக்குதலுக்கு பெயர்போன புலிகளின் கரும்புலிகள் 3 ட்ரக்குகளில் வெடி மருந்துகளை நிரப்பி, சிங்கள படையினர் மீது மோதச் செய்து நடத்திய தாக்கியதில் ராணுவம் பலத்த இழப்பை சந்தித்துள்ளது.

பிப்ரவரி 3 ம் தேதி கேப்பாப்புலவு என்னும் இடத்தில் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தின் அந்தப் பகுதி படையணியே முற்றாக அழிக்கப்பட்டதாகவும், அந்த அணி வைத்திருந்த போர்த் தளவாட சப்ளை வாகனங்கள் 20, டாங்கிகள், மற்றும் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களைப் பிடித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏராளமான ஆயுதப் புதையலை புலிகள் ராணுவத்திடமிருந்து கைப்பற்றியுள்ளதை பற்றியும் படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய படையணிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிற்பது போன்ற படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

அதேநேரம் இந்த தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் இருவர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் படுகாயங்களுடன் கொழும்பு, வவுனியா மற்றும் பொலன்னருவ மருத்துவமனைகளில் ரகசியமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,இது குறித்த தகவல் அறிந்ததும் ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கொழும்பிலுள்ள ராணவத் தலைமையகத்தை முற்றுகையிட்டு , போர் குறித்த உண்மையான தகவல்களைதெரிவிக்கும்படியும்,போரில் காயமடைந்தவர்களை பார்க்க அனுமதிக்கும்படியும், உயிரிழந்தவர்களை பற்றிய விவரங்களை தெரிவிக்கும்படியும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதனால் இலங்கை ராணுவ உயரதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.அணு விஞ்ஞானி விடுவிப்பு : யு.எஸ். கவலை
பாக். குற்றச்சாற்றுக்கு பங்காளதேஷ் கண்டனம்
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி
வன்னி மருத்துவமனை மீது தாக்குதல்: 43 தமிழர்கள் பலி
அல்-காய்தா சவாலாக உள்ளது : யு.எஸ்.
பெர்லினில் தமிழர்கள் கண்டனப் பேரணி
செய்திகள்
சர்வதேசம் - சர்வதேச அளவில் பொதுமக்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல்னா சும்மா இல்ல- விமர்சனம்
'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்‌ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதி‌ரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்...
படிக்காதவன்: விமர்சனம்
வில்லு - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - நமக்கு ஏற்படும் திடீர் அவஸ்தைகளில் ஒன்று, தலைச்சுற்றல்! தலைச் சுற்றல் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, அதை சரி செய்வது எப்படி என்பது போன்ற சந்தேகங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...