|
| போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை: இலங்கை அரசு |
| கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 31 ஜனவரி 2009 ( 09:36 IST ) | |
இலங்கையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்படும் அப்பாவி தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற 48 மணி நேர போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால், இது ஒரு போலி அறிவிப்பு என்றும், ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் போர் நிறுத்தத்தை நீடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கே கூறியதாவது:
போரால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுவிக்க 48 மணி நேர கெடு மட்டுமே விதித்துள்ளோம். போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அந்த கெடு முடிவடைவதற்குள் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் கடும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - வன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள ஏராளமானவர்களில் இளைஞர்கள், பெண்களை கடத்திச் செல்லும் இலங்கை புலனாய்வுத்துறையினர் அவர்களை கொலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... |
| |
|
|
|
|
 | | | படிக்காதவன்: விமர்சனம் | | 'படிக்காதவன்' என்று பெயர் வைத்ததால் லாஜிக் பற்றி எந்தக் கவலையும் படாமல், கமர்ஷியல் படத்தை எடுத்துத் தள்ளிவிட்டார் இயக்குனர்.படித்த குடும்பத்தில் படிக்காத ஒரேயொரு கடைக்குட்டி தனுஷ்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - சமையலில் சுவையான காய்கறியாக பரிமாறப்படும் கேரட் பல்வேறு மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டது... |
| |
|
|
|
|
|
|
|