|
| லஷ்கர் தலைவர் ஹஃபிஸின் வீட்டுக் காவல் நீட்டிப்பு |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2009 ( 14:11 IST ) | |
நவம்பர் 26 ஆம் தேதியன்று நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று குற்றம் சாற்றப்பட்ட லஷ்கர் - இ - தயீபா இயக்கத்தின் அமைப்பு தலைவரான ஹஃபிஸ் முகமத் சையீத்தின் வீட்டுக்காவலை பாகிஸ்தான் அரசு மேலும் நீட்டித்துள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து லஷ்கர் - இ - தயீபாவின் துணை அமைப்பான ஜமாத் - உத் - தவாவுக்கு ஐ.நா. தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து ஹஃபிஸ் முகமத் சையீத்தை கைது செய்த பாகிஸ்தான் போலீஸார், அவரை கடந்த டிசம்பர் மாதம் வீட்டுக்காவலில் வைத்தனர்.
இந்நிலையில், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டதால், அவரது வீட்டுக்காவலை மேலும் நீட்டித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரது வீடு கிளைச் சிறையாக கருதப்படும் என்றும், தடுப்புக் காவல் காலம் முழுவதும் அவர் அந்த வீட்டுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|