|
| பாகிஸ்தானில் அதிகரிக்கும் பயங்கரவாதம் : யு.எஸ். கவலை |
| வாஷிங்டனில் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 13:52 IST ) | |
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
பிரபல அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனரான மைக்கேல் மெக்னால், மும்பையில் தாக்குதல் நடத்தியது பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் பாகிஸ்தானிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஃபட்வா ஒன்றை பிறப்பித்த ஒபாமா பின்லேடன், தனது நோக்கமே பாகிஸ்தானிலுள்ள அரசை அழிப்பதுதான் என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது.அமெரிக்கர்களை கொல்ல அங்குள்ள பயங்கரவாதிகள் உறுதிபூண்டுள்ள நிலையில், அந்த ஆணு ஆயுதங்களால் அமெரிக்கர்களை கொல்லப்படுவதை நீங்கள் ( அமெரிக்க அரசு ) விரும்புகிறீர்களா ? அது குறித்துதான் நான் கவலைப்படுகிறேன்.
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலுமே குறிப்பிடத்தக்க அளவில் பதற்றம் ஏற்பட்டது.இதனை எவ்வாறு இந்த இரு நாடுகளும் தீர்க்கப்போகிறது என்பது தெரியவில்லை.
அதே சமயம் பாகிஸ்தான் குறித்த கவலைதான் எனக்கு மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் அணு ஆயுதம் கொண்ட நாடாக உள்ள பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது என்று அந்த பேட்டியில் மெக்னால் மேலும் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|