|
| போரில் மக்கள் பாதிப்பு: இலங்கைக்கு ஐ.நா. கண்டிப்பு |
| நியூயார்க் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 13:42 IST ) | |
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து ஐ.நா. அகதிகள் அமைப்புக்கான ஆணையர் ரோன் ரெட்மாண்ட் கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் பொது மக்கள் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்தோ, அல்லது காணாமல் போயுள்ளனர்.
இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். போரில் ஏதுமறியாதவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.
போர் காரணமாக வெளியேறிய சுமார் இரண்டு லட்சம் மக்கள், மீண்டும் திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் குடியேறத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய வசதிகள், போதிய பாதுகாப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் அடைகலம் புகுந்த அகதிகளில் 1,500 பேர், 2008 ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.இத்தகைய சாதகமான போக்கு இவ்வாண்டும் தொடர வேண்டும்.
இவ்வாறு ஐ.நா. ஆணையர் ரோன் ரெட்மாண்ட் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|