|
| பணியாளர்கள் போராட்டம் : நேபாளத்தில் ஓட்டல்கள் அடைப்பு |
| காத்மாண்டு ( ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 17:40 IST ) | |
சுற்றுலா நகரான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக 200 க்கும் அதிகமான ஓட்டல்கள் மற்றும் ரெஸ்ட்டாரண்டுகள் மூடிக்கிடக்கின்றன.
அதேபோன்று சுற்றுலா பேருந்து சேவைகள் மற்றும் டிராவல் ஏஜென்சி அலுவலகங்களும் மூடிக்கிடக்கின்றன.
ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்களின் தற்போதைய சம்பளமான ரூ.3,300 ஐ 4,600 ஆக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவோயிஸ்ட் தொழிற்சங்கங்கள் விடுத்த வேலை நிறுத்த போராட்ட அழைப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் மூடிக்கிடப்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காத்மாண்டுவில் தவித்தப்படி உள்ளனர்.ஓட்டல்கள் மூடியிருப்பதால் அவர்கள் தெருவோரக் கடைகளில் உணவு வாங்கி உண்கின்றனர்.
ஒரு சில நான்கு மற்றும் ஐந்து நடசத்திர ஓட்டல்களை தவிர அனைத்து ஓட்டல்களுமே மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|