யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தியா - பாக். ஒத்துழைப்பை அதிகரிக்க யு.எஸ். விருப்பம்
வாஷிங்டன் (ஏஜெனன்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 15:45 IST )
மும்பை பயங்கரவாத தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பதை கண்டறிய இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான த்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என மெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ராபர்ட் வுட், பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மேலும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் ஆதாரங்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா வரவுள்ளாரா என்பது குறித்தோ அல்லது அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாரா என்பது குறித்தோ எதுவும் தெரியாது.

ஆனால் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு உண்மையில் யார் காரணம் என்பதை கண்டறியும் முயற்சியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒத்துழைப்பு அளித்து வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.இந்த ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.இந்த கருத்தை இரு நாடுகளிடமும் தமது நாடு தெரிவித்துள்ளதாக ராபர்ட் மேலும் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாகிஸ்தான்: தீ விபத்தில் 38 பேர் பலி
லெபனான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி
ஒபாமா பதவியேற்பு விழாவில் தாக்குதல்: பயங்கரவாதிகள் திட்டம்
விடுதலை புலிகளுக்கு இலங்கை தடை
பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்
மும்பை தாக்குதல் : பாகிஸ்தான் திடீர் முடிவு
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...