|
| பாகிஸ்தான்: தீ விபத்தில் 38 பேர் பலி |
| கராச்சி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 12:27 IST ) | |
தெற்கு பாகிஸ்தானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குழந்தைகள் உட்பட் 38 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
துறைமுக நகரான கராச்சியில், குடிசைகள் அதிகமுள்ள பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து நேரிட்டதாக, மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிசை வீடு ஒன்றில் உண்டான தீ, மளமளவென மேலும் 16 குடிசைகளுக்குப் பரவியது. உறங்கிக் கொண்டிருந்த மக்கள் வீடு தீப்பிடித்ததையறிந்து பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
எனினும், இந்த கோர விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 38 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை அமைச்சர் சாகீர் அகமது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|