|
| லெபனான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி |
| பெய்ரூட் (ஏஜென்சி), 8 ஜனவரி 2009 ( 17:55 IST ) | |
இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது.
கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீது,இஸ்ரேல் படைகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டன.
இந்த தாக்குதலில் இதுவரை 700 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், இஸ்ரேலின் வடக்கு எல்லையையொட்டியுள்ள லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் படைகள் உடனடியாக ஆர்ட்டிலரி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுகள் இஸ்ரேல் எல்லையிலிருந்து 1.8 மைல் தொலைவில் உள்ள லெபனான் கிராமம் ஒன்றில் விழுந்து வெடித்ததாக லெபனான் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|