|
| ஒபாமா பதவியேற்பு விழாவில் தாக்குதல்: பயங்கரவாதிகள் திட்டம் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 15:19 IST ) | |
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். அவர், வரும் 20ஆம் தேதி நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இவ்விழாவில் அமெரிக்கத் தலைவர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விழாவில், தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இதனால், பதவியேற்பு விழா நடைபெறும் கேபிடல் ஹில் பகுதியைச் சுற்றியுள்ள நட்சத்திர விடுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், உணவகங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|