யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
விடுதலை புலிகளுக்கு இலங்கை தடை
கொழும்பு (ஏஜென்சி), 8 ஜனவரி 2009   ( 11:15 IST )
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்றிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இலங்கை அரசு தடை விதித்தது. பின்னர் 1987-ல் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் 1998-ல் தடை விதிக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அமைச்சரவைக் கூட்டம் அதிபர் ராஜபக்சே தலைமையில் நேற்றிரவு கொழும்பில் கூடியது. இக்கூட்டத்தில் புலிகள் அமைப்பை தடை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட்டது. இந்த தடை நேற்றிரவு முதலே அமலுக்கு வந்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்
மும்பை தாக்குதல் : பாகிஸ்தான் திடீர் முடிவு
காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி
இந்தியாவுக்கு செல்ல தயார் : ஐஎஸ்ஐ தலைவர் அறிவிப்பு
வங்கதேசத்தில் ஹசீனா அரசு பதவியேற்றது
இந்திய ஆதாரம் நம்பத்தகுந்ததாக இல்லை : பாக்.மீண்டும் பல்டி
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...