|
| மும்பை தாக்குதல் : பாகிஸ்தான் திடீர் முடிவு |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 19:14 IST ) | |
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா வழங்கியுள்ள ஆதாரத்தின் மீது உண்மையான புலனாய்வு நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு செய்துள்ளது.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும், பயங்கரவாதமே பாகிஸ்தானின் கொள்கையாக உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று குற்றம் சாற்றிய ஒரு சில மணி நேரத்திற்குள் அதனை நிராகரித்த பாகிஸ்தான் , பிரதமரின் கருத்துகள் ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்திருந்தது.
இருப்பினும் மன்மோகனின் குற்றச்சாற்றைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் நேற்று இதுகுறித்து விவாதித்ததுடன், இந்தியா வழங்கியுள்ள ஆதாரங்களை வைத்து உண்மையான புலனாய்வு நடத்துவது என முடிவு செய்ததாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் புலனாய்வுக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும் அவர்கள் முடிவு செய்ததாகவும், மும்பை தாக்குதலில் குற்றவாளிகள் பிடிபட்டால் அவர்களுக்கு பாகிஸ்தான் சட்டப்படி தண்டனை அளிக்கப்படும், இந்திய அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் எனக் கூறியதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|