|
| காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி |
| ஜெருசேலம் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 18:59 IST ) | |
காஸா பகுதியில் ஐ.நா நடத்தி வந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி நேற்று நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் ஜபால்யா அகதிகள் முகாமில் உள்ள அல்-ஃபகோரா பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அங்கே தங்கியிருந்த நிலையில் பள்ளிக்கு அருகே வீசப்பட்ட 2 குண்டுகள் வெடித்ததில் பள்ளியின் உள்ளே, வெளியே இருந்த ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஐ.நா.வின் நிவாரணப் பணி மையம் சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு பள்ளியின் மீது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று மட்டும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு 75 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம், காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 620 பேர் உயிரிழந்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|