|
| இந்தியாவுக்கு செல்ல தயார் : ஐஎஸ்ஐ தலைவர் அறிவிப்பு |
| புதுடெல்லி / இஸ்லாமாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 13:42 IST ) | |
மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ தாம் இந்தியா செல்ல தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ தலைவர் அகமத் ஷுஜ்ஜா தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பின்னணியிலிருந்து பயிற்சி உள்ளிட்டவைகளை அளித்தது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ தான் என குற்றச்சாற்று எழுந்துள்ளது.மும்பை பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தான் அரசு ஏஜென்சிகளுக்கு தெரிந்தே நடைபெற்றுள்ளதாகவும், பயங்கரவாதம்தான் பாகிஸ்தான் நாட்டின் அரசு கொள்கையாக உள்ளது என்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மிகக்கடுமையாக குற்றம் சாற்றியிருந்தார்.
இது பாகிஸ்தானுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், வழக்கம்போல் இந்திய பிரதமரின் குற்றச்சாற்றை அந்நாடு நிராகரித்தது.இருப்பினும் உலக அரங்கில் தனது 'ரொம்ப நல்ல நாடு ' என்ற வேடத்தை தொடர்வதற்காக சில கண்துடைப்பு அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ தாம் இந்தியா செல்ல தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ தலைவர் அகமத் ஷுஜ்ஜா கூறியுள்ளதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் 'தி நேஷன் ' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் போர் எதுவும் ஏற்படாது.இந்தியாவுடன் போரில் ஈடுபடுவதிலிருந்து நாங்களாகவே விலகி இருக்கிறோம்.இப்போது மட்டுமல்ல ; பொதுவாகவே நாங்கள் அவ்வாறுதான் இருக்கிறோம்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் குழுக்களுக்கு ஐஎஸ்ஐதான் பின்னணியிலிருந்து செயல்பட்டது என்று குற்றச்சாற்றை நிரூபிப்பதற்கான எந்தவித ஆதாரத்தையும் அளிக்க இந்தியா தவறிவிட்டது.அவர்கள் ( இந்தியா ) எந்த வித ( தொலைபேசி ) எண்களையோ, தொடர்புகளையோ, பெயர்களையோ அல்லது வேறு எதையுமே எங்களிடம் அளிக்கவில்லை.இது முகவும் வருந்ததக்கது என அகமத் மேலும் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|