|
| இந்திய ஆதாரம் நம்பத்தகுந்ததாக இல்லை : பாக்.மீண்டும் பல்டி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 18:23 IST ) | |
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரம் நம்பத்தகுந்ததாக இல்லை என பாகிஸ்தான் மீண்டும் பல்டியடித்துள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது எனபாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக இந்தியா வழங்கியுள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனக் கூறியதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ‘தி நேஷன்’ நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக்கிடம் இது குறித்து கேட்டபோது அவர் அதனை மறுத்தார்.
" எங்களிடம் சில ஆவணங்கள் ( மும்பை பயங்கரவாத தாக்குதல் ஆதாரங்கள் ) அளிக்கப்பட்டுள்ளன.நாங்கள் அதனை ஆய்வு செய்து வருகிறோம்.அதனை நிராகரித்துவிட்டோமா அல்லது வேறு ஏதாவதா என்ற கேள்வியே எழவில்லை " என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஷாகித் மாலிக் இவ்வாறு கூறிய சிறிது நேரத்திலேயே,பாகிஸ்தான் மீண்டும் பல்டியடித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் வெளியுறவுகளுக்கான கமிட்டியினரிடம் இன்று உரையாற்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மாலிக் அகமத் கான் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் சல்மான் பஷீர் ஆகியோர், மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர்.
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா எவ்வித நம்பத்தகுந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்றும், பாகிஸ்தான் சட்ட விதிகளுக்குட்பட்ட ஆதாரங்களை இந்தியா அளிக்க வேண்டும் என்று தங்கள் நாடு விரும்புவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|