|
| சீனாவில் சாலை விபத்தில் 13 பேர் பலி |
| பீஜிங் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 17:14 IST ) | |
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குவாங்டோங் மாகாணத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவாங்டோங் மாகாணத்தின் தலைநகர் குவாங்ஸ்ஹோவில் இருந்து கிஸோவ் பகுதியில் உள்ள யான்ஹி என்ற இடத்திற்கு 44 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இப்பேருந்து, 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரியவரவில்லை.
விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|