|
| காஸா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் |
| ஜெருசேலம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 16:23 IST ) | |
காஸாவை இஸ்ரேலிய ராணுவம் முற்றிலுமாக சுற்றி வளைத்து, ஹமாஸ் இயக்கத்தினர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் கடற்படையும், விமானப் படையும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்த, இஸ்ரேல் ராணுவம் நேற்று காஸா நகருக்குள் நுழைந்த ஒரு சில மணி நேரத்திலேயே அந்நகரை முற்றிலுமாக சுற்றி வளைத்தது.
பீரங்கிகள், ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக காஸா நகரின் ஜபாலியா மற்றும் பெய்ட் லஹியா ஆகிய வடக்குப் பகுதிகளில் ஹமாஸ் இயக்கத்தினர் மீது தீவிர தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு நேற்று வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாகவும், இதில் 100க்கும் அதிகமானோர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடும் சண்டை காரணமாக காஸா நகரில் உணவுப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குடிநீர் பற்றாக்குறையும், மின் தட்டுப்பாடும் நிலவுவதால் அந்நகர மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|