யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தியா தந்த ஆதாரத்தை நிராகரிக்கவில்லை : பாக்.
புதுடெல்லி / இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 16:20 IST )
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா தந்த தாரங்கள் ஏற்புடையதாக இல்லை என்று கூறி அதனை தாங்கள் நிராகரிக்கவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக், " எங்களிடம் சில ஆவணங்கள் ( மும்பை பயங்கரவாத தாக்குதல் ஆதாரங்கள் ) அளிக்கப்பட்டுள்ளன.நாங்கள் அதனை ஆய்வு செய்து வருகிறோம்.அதனை நிராகரித்துவிட்டோமா அல்லது வேறு ஏதாவதா என்ற கேள்வியே எழவில்லை " என்றார்.

முன்னதாக மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொட‌‌ர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள அஜ்மல் கஸாப் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது எனபாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக இந்தியா வழங்கியுள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனக் கூறியதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ‘தி நேஷன்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து இந்தியா அளித்த தகவல்கள் போதுமானதாக இல்லை என்பதால் அவ்விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அமெரிக்க வெளியுறவுத் துறை உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் பாகிஸ்தான் தரப்பின் விளக்கத்தை அமைச்சர் பௌச்சரிடம் யார் கூறினார்கள் என்பது பற்றியும், இந்தியா வழங்கிய ஆதாரம் எந்த வகையில் போதுமானதாக இல்லை என்பது குறித்த தகவல்களும் அதில் இடம்பெறவில்லை.

மேலும் இந்தியா அளித்த ஆதாரத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் பதிலளிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல்வேறு புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அறிக்கை தயாரிக்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கையில் தமிழர் ஆதரவு வானொலி, டிவி மீது தாக்குதல்
இந்தியா அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்கிறோம்: பாக்.
கனடாவில் கள்ள நோட்டு அதிகரிப்பு
பயங்கரவாதம் : யு.எஸ்.அதிகாரி பாக். வருகை
பாக்.கில் குண்டுவெடிப்பு: 5 போலீசார் பலி!
லூசியாணா : ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 7 பேர் பலி
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...