யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இலங்கையில் தமிழர் ஆதரவு வானொலி, டிவி மீது தாக்குதல்
கொழும்பு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009   ( 12:52 IST )
இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது.

தலைநகர் கொழும்பில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பான்னிப்பிடியா என்ற இடத்தில் மகாராஜா டிவி மற்றும் மகாராஜா ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதில் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 15 முதல் 20 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று வானொலி, தொலைக்காட்சி நிலைய படப்பிடிப்பு தளங்களுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிடித்தது.

பின்னர் தொலைக்காட்சி படப்பிடிப்பு தளங்கள், உபகரணங்களை அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கி சேதப்படுத்தியது. சுமார் 45 நிமிடங்கள் வரை அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள், அலுவலகப் பொருட்களையும், வெளிப்புறப் படப்பிடிப்பு வாகனங்களையும் சூறையாடினர்.

இதனால் தொலைக்காட்சி, வானொலி சேவைகள் பாதிக்கப்பட்டன. ஒளிபரப்பு மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியா அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்கிறோம்: பாக்.
கனடாவில் கள்ள நோட்டு அதிகரிப்பு
பயங்கரவாதம் : யு.எஸ்.அதிகாரி பாக். வருகை
பாக்.கில் குண்டுவெடிப்பு: 5 போலீசார் பலி!
லூசியாணா : ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 7 பேர் பலி
பாகிஸ்தானில் இன்றும் நிலநடுக்கம்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...