|
| இந்தியா அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்கிறோம்: பாக். |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 14:03 IST ) | |
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இந்தியா அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் கூறியதாவது:
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான சில ஆதாரங்களை, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், இன்று காலை பாஸ்தான் தூதரக அதிகாரியிடம் இன்று ஒப்படைத்தார்.
இதை பெற்றுக் கொண்டோம்.இந்த ஆதாரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆதாரங்களில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மலின் வாக்குமூலம், அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பயங்கவாதிகளுக்கும், பாகிஸ்தானில் இருந்து அவர்களை அனுப்பி வைத்த பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நடைபெற்ற போன் உரையாடல் பதிவுகள் போன்றவை முக்கியமானவையாக கருதப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|