யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பயங்கரவாதம் : யு.எஸ்.அதிகாரி பாக். வருகை
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 13:28 IST )
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து எழுந்துள்ள யங்கரவாத பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ரிச்சர்ட் பவுச்சர் பாகிஸ்தான் வந்துள்ளார்.

அவர் பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் மூத்த அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்த சந்திப்பின்போது மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவு நிலை குறித்து எடுத்துரைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களையும் பவுச்சர் சந்தித்துப் பேச உள்ளார்.

இதனிடையே பவுச்சரை தவிர, அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோசப் பைடனும் இரண்டு நாள் பயணமாக இந்த வார இறுதியில் இஸ்லாமாபாத் வரவுள்ளார்.

மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் நோக்கிலேயே அவர் பாகிஸ்தான் வரவிருப்பதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பைடனுடன் வரும் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜர்தாரி மற்றும் கிலானி ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளனர்.அப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர், இந்தியவுடனான உறவு மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்க உள்ள 15 பில்லியன் டாலர் நிதியுதவி ஆகிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.கில் குண்டுவெடிப்பு: 5 போலீசார் பலி!
லூசியாணா : ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 7 பேர் பலி
பாகிஸ்தானில் இன்றும் நிலநடுக்கம்
ஆனையிறவை கைப்பற்றியது ராணுவம்
பாக்., இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
காஸா தாக்குதலுக்கு ஹமாஸே காரணம் : புஷ் புகார்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...