யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆனையிறவை கைப்பற்றியது ராணுவம்
கொழும்பு (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009   ( 15:33 IST )
கிளிநொச்சியை தொடர்ந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆனையிறவு பகுதியையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது ஆனையிறவு பகுதியையும் அது கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான ஆனையிறவு இரு பக்கமும் கடல் சூழ்ந்த பகுதியாகும். 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த கடும் சண்டையில் இது விடுதலைப்புலிகள் வசமானது.

ஆனையிறவை கைப்பற்றியதன் மூலம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போக்குவரத்து எளிதாகியுள்ளது. கொழும்புக்குச் செல்லும் ஏ- 9 நெடுஞ்சாலையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

தற்போது பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத் தலைவர்கள் பதுங்கியுள்ள முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேற தொடங்கியுள்ளது. முல்லைத்தீவில் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இதற்கிடையே, கொழும்பு நகரில் பெட்டா மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக் கிழமை கிளிநொச்சி வீழ்ந்ததையடுத்து புலிகள் நடத்திய 2-வது குண்டு வெடிப்பு சம்பவம் இதுவாகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்., இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
காஸா தாக்குதலுக்கு ஹமாஸே காரணம் : புஷ் புகார்
இலங்கை: முல்லைத்தீவு நோக்கி முன்னேறுகிறது ராணுவம்!
'சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனை ரத்தாகலாம்'
ஆள் இல்லாத கிளிநொச்சியை பிடித்த ராணுவம்: புலிகள்
கிளிநொச்சியை கைப்பற்றியது ராணுவம்: ராஜபக்சே அறிவிப்பு
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...