|
| காஸா தாக்குதலுக்கு ஹமாஸே காரணம் : புஷ் புகார் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 17:46 IST ) | |
இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசியதுதான் காஸா மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் நடத்த காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
வானொலியில் நேற்று அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையின்போது இதனை தெரிவித்த புஷ், கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளின் நிலையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், ஏராளமான துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பு இறக்குமதி செய்துள்ளதாகவும் கூறினார்.
ஹமாஸ்-இஸ்ரேல் இடையே எகிப்து ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஹமாஸ், அப்பாவி இஸ்ரேல் மக்களை ராக்கெட் குண்டுகள் வீசி கொன்று குவித்ததாகவும், இத்தாக்குதலை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததையும் புஷ் தனது உரையில் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் புஷ் அப்போது மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|