|
| இலங்கை: முல்லைத்தீவு நோக்கி முன்னேறுகிறது ராணுவம்! |
| கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 17:09 IST ) | |
விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகராக இருந்த கிளிநொச்சியை கைப்பற்றியதை அடுத்து, புலிகளின் ராணுவத் தலைமையகமாக கருதப்படும் முல்லைத்தீவை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறி வருகிறது.
இலங்கையில், கடந்த சில வாரங்களாக நடந்த கடுமையான போராட்டத்துக்கு பின்னர், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகராக திகழ்ந்த கிளிநொச்சியை ராணுவம் நேற்று கைப்பற்றியது.
கிளிநொச்சியை தக்கவைத்து கொள்வதற்காக் போராடிய புலிகள், ஒரு கட்டத்தில் தங்களது முகாமை வேறுபகுதிக்கு மாற்றி கொண்டனர். தற்போது முல்லைத்தீவு உள்ளிட்ட சில பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.
கிளிநொச்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, இலங்கை ராணுவம் தற்போது புலிகளின் ராணுவ தலைமையகமாக செயல்பட்டு வரும் முல்லைத்தீவை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக இலங்கை ராணுவத்தினர் தற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இதற்கான நடவடிக்கையின்போது, விமானப்படை ஹெலிகாப்டர்கள் முல்லைத்தீவு அருகேயுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் மீதும், பேரூந்து நிலையம் ஒன்றின் மீதும் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|