|
| 'சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனை ரத்தாகலாம்' |
| லாகூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 12:45 IST ) | |
பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரான சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் ஃபரூக், அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி வலியுறுத்தியுள்ளதாக லாகூரிலிருந்து வெளியாகும் 'தி நியூஸ்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் வாடும் அனைத்து தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அந்நாட்டு சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தி வருவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலர் அன்சார் பர்னி தெரிவித்துள்ளார்.
இதனிடையே மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு கைதான பயங்கரவாதி அஜ்மல், பாகிஸ்தானைச் சேர்ந்தவரா இல்லையா என்பதையும் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அன்சார் கடிதம் எழுதியுள்ளார்.
அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்தான் என்பதை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்களை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட பின்னரும், உள்துறை அமைசகம் மவுனம் சாதிப்பது இந்த பிராந்தியத்தில் சந்தேகத்தையும், நிச்சயமற்ற நிலையையும் ஏற்படுத்துவதாகவும், இது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|