|
| கிளிநொச்சியை கைப்பற்றியது ராணுவம்: ராஜபக்சே அறிவிப்பு |
| கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 09:01 IST ) | |
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைநகரமாக திகழ்ந்து வரும் கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புலிகளை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியது.
இதனால், சமீபகாலமாக இரு தரப்புக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. கடந்த சில வாரங்களாக கிளிநொச்சியை பிடிக்க ராணுவம் முன்னேறி வந்தது. இதில் பலத்த உயிர் சேதத்தையும் சந்தித்தது.
நேற்று முன்தினம் கிளிநொச்சியின் வடக்கு பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தன் என்ற நகரத்தை கைப்பற்றியது. பின்னர் இரணமேடு என்ற இடத்தையும் பிடித்தது.
இதன் பின்னர், புலிகளின் அரசியல் தளமான கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறியது. புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக நேற்று கிளிநொச்சிக்குள் நுழைந்தனர். ஏராளமான பீரங்கிகளும் கிளிநொச்சிக்குள் நுழைந்தன.
இதைதொடர்ந்து கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, புலிகள் காட்டுப்பகுதிகளுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை கைப்பற்றியதன் மூலம், கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டு போரில் ராணுவத்துக்கு மிக முக்கியமான வெற்றியாக இது கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளிநொச்சியை இழந்தது புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் ராஜபக்சே நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற ராணுவ வீரர்களின் பெருமை வரலாற்றில் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழேபோட்டு விட்டு, ராணுவத்திடம் சரண் அடைய வேண்டும். உலகின் சக்தி வாய்ந்த பயங்கரவாத இயக்கம் என்றும் வர்ணிக்கப்படும் விடுதலைப் புலிகளின் கோட்டையை கைப்பற்றியிருப்பது பயங்கரவாதத்துக்கு எதிராக கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|