|
| கொழும்பு நகரில் தற்கொலைப்படை தாக்குதல் |
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009 ( 18:34 IST ) | |
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இன்று நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு நகரில் உள்ள இலங்கை விமானப்படை தலைமை அலுவலகம் அருகே இன்று பிற்பகலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சி நகரை கைப்பற்றிவிட்டதாக அதிபர் மகிந்தா ராஜபக்சே அறிவித்த சில மணி நேரத்தில், இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|