யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்: பாக்.
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009   ( 16:32 IST )
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணமில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அளித்துள்ள பேட்டி:

இந்தியா- பாகிஸ்தான் இடையே குற்றவாளிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் உடன்படிக்கை எதுவும் இல்லை.

தற்போது உள்நாட்டு அமைப்புகளை மீண்டும் கட்டமைப்பதில் முனைப்பாக உள்ளோம். இந்த நேரத்தில் இந்தியாவிடம் பயங்கரவாதிகளை ஒப்படைத்தால் அது நாட்டின் கட்டமைப்புக்கு பாதகமாக முடிந்துவிடும்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இரு நாடுகளின் நலனை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.

பயங்கரவாதம் என்பது இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரி. அதனை ஒழிக்க ஒன்றிணைந்து போராட வேண்டும்.

அந்த வகையில் ஆக்கப்பூர்வமான கூட்டு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எப்போதும் தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டோம்: இலங்கை
தைவானில் கடலுக்கடியில் பூகம்பம்!
பாக்.குக்கு நெருக்கடி: அமெரிக்காவின் 'சுருதி' குறைகிறது!
வேறு பெயரில் இயங்க ஜமாயத்-உத்-தாவா திட்டம்
கிளிநொச்சிக்குள் நுழைந்தது இலங்கை ராணுவம்
அஜ்மல் கிராமத்தில் எப்பிஐ அதிகாரிகள் விசாரணை
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...