யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக்.குக்கு நெருக்கடி: அமெரிக்காவின் 'சுருதி' குறைகிறது!
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 2 ஜனவரி 2009   ( 13:12 IST )
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்து வந்த நெருக்கடி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வந்தது.

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது.

ஆனால், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் தங்களது நாட்டினரே அல்ல என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் விஷயத்தில் தற்போது அமெரிக்காவின் 'சுருதி' குறைந்துவிட்டதாக தெரிகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையே பயங்கரவாதிகளை, இந்தியாவிடம் ஒப்படைத்தே தீர வேண்டும் என்று இதுவரை வலியுறுத்தி வந்த அமெரிக்கா, தற்போது 'தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தானிலேயே விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம்' என்று இறங்கி வந்துள்ளது.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்காது என்பது உறுதியாக தெரிந்த பின்னரே, அமெரிக்க தற்போது தனது 'சுருதி'யை குறைத்து கொண்டதாக தெரிகிறது.

தங்களது நாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதை, பாகிஸ்தான் அரசு மிகப்பெரிய பலவீனமாக கருதுகிறது.
அதோடு, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தாலிபன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பாகிஸ்தான் அரசு அஞ்சுகிறது. இதன் காரணமாகவே பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுக்கிறது.

இதனால், பாகிஸ்தான் மீதான நெருக்கடியை அமெரிக்காவும் குறைத்துகொண்டுவிட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேறு பெயரில் இயங்க ஜமாயத்-உத்-தாவா திட்டம்
கிளிநொச்சிக்குள் நுழைந்தது இலங்கை ராணுவம்
அஜ்மல் கிராமத்தில் எப்பிஐ அதிகாரிகள் விசாரணை
பராந்தன் நகரை பிடித்தது ராணுவம் : புலிகள் 50 பேர் பலி
புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து :பாங்காக்கில் 59 பேர் பலி
மும்பை தாக்குதலில் தொடர்பு: ல‌ஷ்கர் ஒப்புதல்
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...