|
| பாக்.கின் பயங்கரவாத எதிர்ப்பு நிலை : ரைஸ் திருப்தி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 17:15 IST ) | |
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான பாகிஸ்தானின் உறுதியான நிலை திருப்தியளிப்பதாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையிலும்,பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாகவும், ரைஸ் தனது ஐரோப்பிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நேற்று டெல்லி வந்தார்.
இந்திய தலைவர்களை சந்தித்துப் பேசிய பின்னர் இன்று பாகிஸ்தான் வந்த காண்டலீசா ரைஸ்,அந்நாட்டு அதிபர் ஜர்தாரியை சந்தித்துப் பேசினார்.
அப்போது மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் நிறுத்துவதற்கான உதவியை இந்தியாவுக்கு பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என ஜர்தாரியிடம் ரைஸ் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரைஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் தற்போதைய அரசு உறுதியாக உள்ளதாகவும், பயங்கரவாத சக்திகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதை விரும்பவில்லை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நிலை திருப்தியளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான தனது கடமைகளையும், பொறுப்பையும் பாகிஸ்தான் உணர்ந்துள்ளதாகவும் ரைஸ் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|