|
| மும்பை தாக்குதல் : நடவடிக்கைக்கு பாக். உறுதி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 16:02 IST ) | |
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தம்மை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸிடம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி உறுதியளித்துள்ளார்.
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையிலும்,பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாகவும், ரைஸ் தனது ஐரோப்பிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நேற்று டெல்லி வந்தார்.
இந்திய தலைவர்களை சந்தித்துப் பேசிய பின்னர் இன்று பாகிஸ்தான் வந்த காண்டலீசா ரைஸ்,அந்நாட்டு அதிபர் ஜர்தாரியை சந்தித்துப் பேசினார்.
இருவரது பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிபர் ஜர்தாரி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா நடத்தும் புலனாய்விற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என ரைஸிடம் ஜர்தாரி உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த உறுதியான ஆதாரம் கிடைத்த பின்னர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது என்பதிலும் தமது அரசு உறுதியுடன் இருப்பதாகவும் ஜர்தாரி கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரைஸ் இந்தியா வந்திருந்த நிலையில், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா அளித்த பட்டியலிலுள்ள பாகிஸ்தானில் இருக்கும் குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என் றும், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டு, தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் பயங்கரவாதி அஜ்மல் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தம்மால் நம்ப இயல்வில்லை என்றும் ஜர்தாரி நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|