யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஜப்பானின் வட பகுதியில் நிலநடுக்கம்
டோக்கியோ (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 11:13 IST )
ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதனால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

தலைநகர் டோக்கியோவில் இருந்து 290 கி.மீ. தொலைவில் உள்ள மியாகி கடற்கரை நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 6.1 ஆக இது பதிவானதாகவும் ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ இதுவரை ஏற்படவில்லை என்றும் மின்சாரம், தொலைத் தொடர்பு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சேவை பாதிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்தித்து வருகிறது ஜப்பான். கடந்த 1995 ஆம் ஆண்டு கோபே நகரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 6,400 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தெற்காசியா கவலையளிக்கும் பகுதியாக உள்ளது : ஒபாமா
மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் தேசமற்றவர்கள் : ஜர்தாரி
மும்பை தாக்குதல் குறித்து கூ‌ட்டு‌ப் புலனா‌ய்வுக்கு தயா‌ர்: பா‌கி‌ஸ்தா‌ன்
மும்பை தாக்குதல்: முன்கூட்டியே எச்சரித்த யு.எஸ்.
இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு : ஒபாமா
கொக்கவில் நகரை பிடித்தது இலங்கை ராணுவம்!
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...